வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற சச்சிதானந்தத்திற்கு வெற்றி சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் பூங்கொடி வழங்கினார்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 502 வாக்குகள் பெற்றார்.
இதில் அதிமுக சார்பில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட முகம்மது முபாரக் 2 லட்சத்து 26 ஆயிரத்து 569 வாக்குகள் பெற்றார். இதில் சச்சிதானந்தம் 4 இலட்சத்து 43 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி வெற்றி சான்றிதழை சச்சிதானந்தத்திடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.