தேனி மாவட்டம் போடி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட த ர்மத்துப் பட்டியில் போடி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக மறைந்த முன்னாள் கருணாநிதியின்101 வது பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி லோக்சபா தொகுதி எம் பி யும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தர்மத்துப்பட்டி பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு எம்பி தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
மேலும் அந்த கிராமத்தின் ஏழை எளிய பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்பி ஐயப்பன் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப் கான் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் கண்ணன் காளிதாஸ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்மத்துப்பட்டி கிளைக் கழக திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்