செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் உள்ள மாத்திக்கேட் கிராமத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை……

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் உள்ள
மாத்திகேட் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்நிலையில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் நீர் தேக்கத் தொட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் கம்பிகள் துருப்பிடித்து சாய்ந்து கொள்ளும் நிலையில் உள்ளதாலும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் சுத்தமில்லாமல் வருவதால் கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
எனவே நீர்த்தேக்கத் தொட்டி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் புதிய நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டித் தருமாறு பொதுமக்களும் கிராமவாசிகளும் கோரிக்கை விடுத்தனர்..