தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக குழு கூட்டம் தலைவர் எல்.எட்வின் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை நிர்வாக சபை கூட்டம் அலுவலகத்தில் 5-6-24 அன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். துணை மேலாளர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் எல் எட்வின் பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சசிகுமார், ராஜேந்திரன், கார்த்திக், பரதேசி, தாசன், விஜிலியா, புஷ்பராணி, விஜயலட்சுமி, டெல்சி, ஜாக்லின், விஜயா,ஜானகி, ஈஸ்வரி, சுப்புலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.