புதுச்சேரி மாநில திமுக மருத்துவர் அணி சார்பில் இன்று நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திமுக மருத்துவர் அணி சார்பில், எல்.கே. நர்சிங் ஹோம் மற்றும் லட்சுமி நாராயணா மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் இலாசுப்பேட்டை தொகுதி, மகாவீர் நகரில் உள்ள எல்.கே. நர்சிங் ஹோமில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
முகாமிற்கு திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் கோ. தியாகராஜன் என்கிற ராஜா முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பூ மூர்த்தி வரவேற்று பேசினார்.
முகாமை திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்து, வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து, மாநில துணை அமைப்பாளர் வி.அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்ப்த, எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முகாமில் லட்சுமிநாராயணா மருத்துவமனை மருத்துவ குழுவினர் பொது மருத்துவர், இதயவியல், நரம்பியல், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர்.
இதில் இலாசுப்பேட்டை மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.