பெரியகுளத்தில் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா
கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளம் நகர திமுக சார்பில் அரசு தலைமை மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் ஆகியோர் தலைமையில் அங்கு மனநல சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வேஷ்டி சேலை மற்றும் அவர்களுக்கு அறுசுவையான உணவுகள் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நகர நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்