தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேடப்பட்டி வட்டாரக்கிளையின் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கும் கடந்த ஆண்டு கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா வட்டாரத்தலைவர் சுப்புராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் வட்டாரச்செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசித்ரா, திருமங்கலம் கல்வி மாவட்டச்செயலாளர் தனபாக்கியம், மாவட்டப்பொதுக்
குழு உறுப்பினர்கள் சக்திவேல், பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டாரத்துணை நிர்வாகிகளான சந்திரசேகரன், திலகராஜ், ராஜலட்சுமி, ஜான்ஸ் குமார், பார்த்தசாரதி ஆகியோர் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களையும், கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களையும் வாழ்த்தி பேசினர். விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் நிர்வாகி ஜூவி சிறப்புரை
யாற்றினார். விழா நிறைவில் வட்டாரபொருளாளர் தீபா நன்றி கூறினார். விழாவில் சேடப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
