வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் மேம்பால பள்ளத்தை சீரமைத்த தன்னார்வலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள்.
திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில் உள்ள பள்ளங்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்து வந்தது. இந்தப் பள்ளங்கள் நாளுக்கு நாள் பெரிதாகி வருவதால் விபத்து ஏற்படுத்தி உயிர் சேதங்களை ஏற்படுத்தும் சூழல் நிலவி வந்தது.
இதையடுத்து திண்டுக்கல் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர் பால்தமாஸ் மற்றும் அவரது குழுவினர் மேம்பால சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் மணல் மற்றும் ஜல்லிக்கட்டு பரப்பி பள்ளங்களை சீர் செய்தனர்.