ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி இஆப தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் மூலம் நவீன செயற்கை கால் 3 நபர்களுக்கு ரூ 75 000 மதிப்பீட்டில் மொத்தமாக 2.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியில் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்சம் 2 நபர்களுக்கும் பழங்குடியினர் நலத்துறை இன சார்பில் 5 நபர்களுக்கு தலா 35 000 வீதம் 1,75 லட்சம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கப்பட்டது
இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது ) விஜயராகவன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.