ராஜபாளையம் நகர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்! வேளாண் உதவி இயக்குனர் துவக்கி வைத்தார்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் 8 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் நகர் பகுதியில் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள திடலில் நெல் கொள்முதல் நிலையம் இன்று துவக்கப்பட்டது.
முன்னோடி விவசாயி என்.ஏ. ராமச்சந்திர ராஜா தலைமையில் சேத்தூர் முன்னோடி விவசாயி பி. அம்மையப்பன் முன்னிலையில் ராஜபாளையம் வேளாண் உதவி இயக்குனர் திருமலைச்சாமி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். கொள்முதல் அதிகாரி வெங்கடேசன் வரவேற்றார்.
வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நாள்தோறும் 40 கிலோ கொண்ட நெல் மூடை 800 வரை கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நெல் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பலாம்.