பல்லடம் அருகே கேத்தனூரில் தனியாருக்கு சொந்தமான காற்றாலையில் கரும்புகை வெளியேறியதால் பொதுமக்கள் அச்சம்!!


சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறை வீரர்கள்!!!
திருப்பூர் மாவட்டம்,

பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் காற்றாலையிலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதனைத் தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து சென்ற நிலையை அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர் பல்லடம் அருகே தனியார் காற்றாலையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *