புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி தொடங்கியது வருவாய் தீர்வாயம் அலுவலர் தனலட்சுமி தலைமையில் வட்டாட்சியர் தனபதி துணை வட்டாட்சியர் சசிகுமார் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தமிழ் செல்வி ஆகியோர் தலைமை நிலை அளவியர் சாகுல் ஹமீது முன்னிலையில் தொடங்கி நடைபெற்று
வரும் ஜமாபந்தியில் புவனகிரி பகுதி பொதுமக்களின் பல்வேறு குறைகள் மனுவாக பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது மேலும் அடுத்து பத்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வருவாய்த்துறை சார்பில் கேட்டுக்கொள்கின்றனர்
மேலும் இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவசாயத் துறை சார்ந்த அலுவலர்கள் பேரூராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் மருத்துவம் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்றனர்