சர்வதேச விளையாட்டு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் தலைமையில் சர்வதேச விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி பருவத்தில் இருந்தே பல போட்டிகளில் பங்கு பெற்று தமிழ்நாடு அளவில் மற்றும் இந்திய அளவில் பரிசுகள் பெற்று உள்ளார்.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ம், நடிகையுமான பிரியா, சமூக சேவகி யும், நடிகையுமான மதுரை வனிதா, ஆசிரியை கிருபா, சித்ரா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். விழா நாயகன் ஜெ.விக்டர் கூறுவது பள்ளி மாணவ, மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும், வயதானவர்களும் தினமும் நடை பயணமும், உடற்பயிற்சியும், யோகாவும் செய்து உடலை வலிமையாக்குங்கள் மற்றும் மனதை வளமையாக்குங்கள் என்றார்.
அனைவருக்கும் இனிப்புகள், தேனீர் வழங்கப் பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.