வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
கலெக்டர் அருண்தம்புராஜ் மரக்கன்று நட்டு வைத்த பின்னர் மனுக்கள் பெற்றார்
வேப்பூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஜீன் 12 ந் தேதி கடலூர் கலெக்டர் டாக்டர் அருண் தம்புராஜ் மனுக்களை பெற்றார்
முன்னதாக வேப்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்
பின்னர் வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட மாளிகைமேடு, மேலக்குறிச்சி,கீழக் குறிச்சி, என்,நாரையூர்,
சேப்பாக்கம்,ஐவதகுடி,கொ.கொத்தனூர்,
திருப்பெயர்,தே.புடையூர், வரம்பனூர் உள்ளிட்ட 10 கிராம மக்களிடம் வருவாய் தீர்வாயம் தொடர்பான கோரிக்கை மனுக்களை நேரிடையாக பெற்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க துறைவாரியாக ஒப்படைத்தார்
இந்நிகழ்ச்சியில் ஜமாபந்தி மேலாளர் சுரேஷ், வேப்பூர் வட்டாட்சியர் மணிகண்டன், சமூக நல வட்டாட்சியர் மோகன், துணை வட்டாட்சியர்கள் ஜார்ஜ் பெர்னான்டோ, வேல்முருகன், வருவாய் ஆய்வாளர்கள் வேப்பூர் ராஜவேல், சிறுபாக்கம் சிவக்குமார், வட்ட தலைமை சர்வேயர் ராஜசேகர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலையரசன்,ராஜாமணி,ராஜீவ்,ஜெயகோபி,ரெங்கநாதன்,ரவிக்குமார், அருண், பிரியா மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்