வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்த 2 உணவுக் கூடங்களுக்கு சீல் – மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, மாநகர் நல அலுவலர் பரிதாவாணி மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் தர்ஷிணாமூர்த்தி, பாலமுருகன் உள்ளிட்ட கொண்ட குழுவினர் தெற்கு ரதவீதி, நாராயண பிள்ளை சந்து பகுதியில் உள்ள தங்கவேல் மற்றும் பரமசிவம் ஆகியோரின் சமோசா தயாரிப்பு கூடத்தில் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, சமோசா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களான வெங்காயம் அழுகிய நிலையிலும், கெட்டுப்போன உருளைக்கிழங்கு மற்றும் சுகாதாரமற்ற எண்ணெய் ஆகியவை இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு பணியாற்றிய 10-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றி, 2 சமோசா கூடத்திற்கும் சீல் வைத்தனர்.