தென்காசி மாவட்டம் வடகரை கீழப்பிடாகை வட்டத்திற்கு உட்பட்ட பண்பொழி கிராமத்தில்
உணவு வட்டார பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியம் பண்பொழி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது மூன்று கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது
இதை அடுத்து அச்சம் புதூர் காவல் துறையினர் முன்னிலையில் சோதனை இட்டு சம்பந்தப்பட்ட மூன்று கடைகளில் எடுக்கப்பட்ட புகையிலை பொருட்கள் 4.755 Kg கைப்பற்றப்பட்டு உணவு பாதுகாப்பு விதி 3 u/s 55 of FSS Act 2006 ன்படி சோதனை செய்யப்பட்ட 3 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அபராத தொகையாக ரூபாய் 100000 ஒரு லட்சம் விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மூன்று கடைகளும் சீல் வைக்கப்பட்டது
உணவு பாதுகாப்பு மற்றும் புகையிலை ஒழிப்பு எந்தவித சமரசமும் செய்யாமல் நேர்மையாக பணியாற்றி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் அவர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்