வலங்கைமான் மணவெளித்தெரு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் கிராமத்து குடும்ப விழாவையொட்டி திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மணவெளித்தெரு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழாவும் கிராமத்து குடும்ப விழாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் துவக்கமாக நேற்று (13ஆம் தேதி) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு திருக்கொடி பவனி நிகழ்ச்சியும் , 7 மணி அளவில் திருக்கொடி ஏற்றமும், திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் அருட்பணி டீ .லாசர் ஓசிடி, அருட்பணி ஏசுதாஸ் ஓசிடி, வலங்கைமான் அருட்பணி டி ஆல்பர்ட் ஓசிடி தலைமை வகித்து திருக்கொடியை ஏற்றி வைத்தனர்.நிகழ்ச்சியில் சிறுவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். வருகின்ற 15 ஆம் தேதி புனிதரின் திருத்தேர் பவனி விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை வலங்கைமான் அருள் தந்தை பி. ஆல்பர்ட் ஓசிடி, கார்மல் அருட்தந்தையர்கள், தெரேசியன் கார்மல் அருட்சகோதரிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள், குமரன் இளைஞர் நற்பணி மன்றம், அந்தோணியார் மகளிர் அம்பியம் & மணவெளித்தெரு இறை மக்கள் மற்றும் விழா உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.