இராஜபாளையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
ஒவ்வொறு ஆண்டும் ஜூன்12’ல் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைகுழு, தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் உத்தரவுப்படி, இராஜபாளையம் வட்ட சட்ட பணிகள் குழு, தலைவர், திருமதி.A. பிரீத்தி பிரசன்னா B,A, B.L ( நீதிமன்ற நீதிபதி ( பொறுப்பு ), வட்ட சட்டப் பணிகள் குழு, தலைவர். அவர்கள் தலைமையில் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பு, நகராட்சி ஆணையாளர், வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் ஆகியோரார்களால் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறைக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகையில் கையொப்பம் இட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,
இந்நிகழ்வு பழைய பேருந்து நிலையம் தொடங்கி காந்தி சிலை ரவுண்டானா வரை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நடந்து சென்றனர்.
பேரணி காந்தி சிலை ரவுண்டானா கடந்து சென்றபோது இராஜபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் அவர்கள் கலந்துகொண்டு விழிப்புனர்வு பிரசுரங்கள் வழங்கியும் உறுதிமொழி ஏற்று கையெழுத்து இட்டு வாழ்த்தி பேசினார்
நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பட்டு துறை வேர்ல்டு விஷன் இந்தியா அமைப்பும், இராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழுவும் இணைந்து ஏற்ப்பாடு செய்திருந்தது.