தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க நகர் நல சங்கம் சார்பில் பேரிக்காடு அமைப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது
கம்பம் புதுப்பட்டி கம்பம் சுற்றில் உள்ள கிராமங்களிலே மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமம் கம்பம் புதுப்பட்டி இந்த ஊரில் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் டவுன் பஸ்கள் லோக்கல் பஸ்களைத் தவிர மற்ற மற்ற ஊர்களுக்கு செல்லும் எந்த பஸ்களும் இங்கு நிற்பதில்லை.
இதனால் அதிவேகத்தில் செல்லும் அனைத்து வாகனங்களாலும் அடிக்கடி விபத்துக்கள் நடந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள இடத்தில் இனி விலைமதிப்பற்ற மனித உயிர் அந்த இடத்தில் போக கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் கம்பம் புதுப்பட்டி நகர் நல சங்கம் சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் பேரிக்காடு தடுப்பு வேலி அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கம்பம் புதுப்பட்டி நகர் நல சங்கத் தலைவர் எஸ் சி .எஸ் .டி ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்க நிறுவனத் தலைவர் முனை வர் க.சுப்பிரமணியன் தலைமை வகித்தார் செயலாளர் எஸ். ரெங்கராஜ் பொருளாளர் எஸ் ஆசிக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் ஜி கே முருகன் சுகந்தம் ஸ்டோர் முருகன் துணைச் செயலாளர்கள் சோடா பாண்டி செல்லமுத்து கணேசன் துணைத் தலைவர்கள் பஷீர் ரவிச்சந்திரன் வேலுச்சாமி செயற்குழு உறுப்பினர்கள் ரஞ்சித் குமார் ரக் யுதீன் சந்திரசேகரன் கோபால் வைரமணி ராஜாங்கம் போது மணி ராஜா குட்டி மணி உத்தம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் மற்றும் போஸ்ட் மேன் செல்லமுத்து தொழில் அதிபர் கே. எம் .பில். ரவி கௌரவ தலைவர்கள் ஒக்கலிகர் சங்கத் தலைவர் டி.வி. சிவாஜி மோகன் நிலக் கிழார் கள் கே. எல் .எஸ். டி. காமேஸ்வரன் ஏ எஸ் என். முரளி ராஜன் உள்பட நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்