காரைக்கால் பகுதியில் உள்ள அரசினர் மேனிலை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான ( CBSE ) இரண்டாம் கட்ட கலந்தாய்வு
திங்கட்கிழமை துவங்கின,2024-25 ஆம் கல்வியாண்டிற்கான காரைக்கால் பகுதியில் மேனிலை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான (CBSE) அரசினர் பள்ளி அளவிலான சேர்க்கைகள் முடிவுற்றது.
அதன் தொடர்ச்சியாக அரசு மேனிலை பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை இரண்டாம் கட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்ப மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்ககத்தின் வழிகாட்டுதலின் படி துணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அலுவலகம் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு மேனிலை பள்ளிகளுக்கு பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக விண்ணப்பித்து இடம் கிடைக்க பெறாதவர்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சேராத மாணாக்கர்களுக்கும் இறுதி வாய்ப்பாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கை ஆணை வழங்கப்படவுள்ளது.
கோவில்பத்து தந்தைப் பெரியார் அரசு மேனிலைப்பள்ளியில் 10.06.2024 (திங்கள்கிழமை) இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றன.
இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் காலை 9:00 மணி முதல் 1.00 வரை 497 முதல் 298 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் மாலை 2.30 முதல் – 05.30 வரை 297 முதல் 159 வரை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றன. மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையினை வழங்கி சிறப்பித்தார்கள். N.S.C போஸ் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் திருமதி. ஜெயா அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.