புதுச்சேரி மாநிலத்தில் பிஜேபி – என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு லாபத்துடன் இயங்கி வரும் மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்திருக்கும் பிஜேபி கூட்டணி அரசு மின்துறையை சீரழித்து வருகிறது.

தனியார்மயமாக்கல் என்ற நிலையை எடுத்தபிறகு மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டு வருகிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பல முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு பல நிலைகளில் மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். உதாரணத்திற்கு ஐந்நூறு ரூபாய் மின் கட்டணம் செலுத்திய நிலையில் இருந்த நுகர்வோர் தற்போது இரண்டாயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்த கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மின் கட்டண உயர்வு மிகவும் கண்டிக்கதக்கது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து கொதித்தெழுந்திருக்கிறார்கள். குறிப்பாக மின் கட்டணம் உயர்வு மட்டுமல்லாமல் Connected Load Charges, Surcharges, காலதாமதக் கட்டணம், போன்ற இதர பல கட்டணங்களை உயர்த்தி பல மடங்கு மின் கட்டணம் வசு+லிக்கப்படுகிறது.

இது மக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது. மின்கட்டண உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் வளர்ந்து வரும் புதுச்சேரி நகரத்திற்கு ஏற்ப மின் இணைப்புகளை கட்டமைக்கவில்லை. இதனால் புதுச்சேரியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

மின்தடை போக்க நிரந்தரமான தீர்வை எடுக்காததால் நகரப்பகுதி அடிக்கடி இருளில் மூழ்கிறது.தற்போது மின்துறையில் construction Labour என்று சொல்லக்கூடிய பணிகளுக்கு ஆட்கள் இல்லை. அதேபோல J.E, A.E, போன்ற பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் பாதாள மின்கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட்ட இடங்களில் இந்த மின்கேபிள் பழுது ஏற்படும் போது இதற்கான பள்ளம் தோண்டும் பணிகளும், அந்த இணைப்புகளை சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது..

அதேபோல மின் உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது. மின் தடை ஏற்படும் போது பல மணிநேரம் மக்கள் இருளில் மூழ்கிறார்கள்.

இப்படிபட்ட நிலையில் மின்கட்டணம் உயர்வு என்பது மிகவும் கண்டிக்கதக்கது, வருந்ததக்கது.
ஆகையால் இந்த அரசு பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு மின் கட்டணம் உயர்வை திரும்பபெற வேண்டும்.

அப்படி இல்லையென்றால் மின்கட்டண உயர்வை கண்டித்து பொதுநல அமைப்பினர் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன்.என்று செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் நேரு தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *