புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி அதன் நகலை எரித்து போராட்டம்
புதுச்சேரி காமராஜ் சிலை எதிரில் நடைபெற்றது இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ,தலைவர் வீர. மோகன் , துணைத் தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ் மற்றும் தோழமை இயக்கங்களாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் லோகு . ஐயப்பன், அமைப்பாளர்
தந்தை பிரியன்,செயலாளர் விஜய் சங்கர், திராவிட கழக பொறுப்பாளர்கள் அன்பரசன் , அறிவுக்கரசு பகுத்தறிவு கழக தலைவர் தமிழ்ச்செல்வன், விசிக மாணவர் அணி பொறுப்பாளர் நெடுஞ்செழியன்,
பெரியார் சிந்தனை இயக்கம்
தீன தயாளன்,மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன்,தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் பொறுப்பாளர்கள் ராஜா, செல்வகுமார் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வு ஆணை நகலை போராட்டக்காரர்கள் எரித்து மாநில, மத்திய அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தனர்
அதனை தொடர்ந்து புதுவை பெரிய கடை காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்து காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது