தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி. கே. வாசன் பல்வேறு நிகழ்ச்சிக்காக கும்பகோணம் வருகை தந்தார். அப்போது பத்திரிகையாளரிடம் பேட்டி அளித்ததாவது:-
பாராளுமன்ற தேர்தலில் 23 இண்டி கூட்டணிகள் சேர்த்து பெற முடியாத மத்திய ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தனிப் பெரும்
பான்மை என கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைந்து உள்ளது.
மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை மோடி தக்க வைத்திருப்பது மிகப்பெரிய சாதனை.
மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது எனவே வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக
மாற்றம் ஏற்படும்.
தமிழக அரசு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் சாலை வசதிகளை தரமாக அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
குறுவை தொகுப்பு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும்.மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசு கர்நாடக அரசிடம் மெத்தனப்
போக்காக இருந்து வருகிறது.அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிப்பது அரசின் கடமை.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது ,இதற்கு பாஜகவின் கூட்டணி தான் காரணமா அல்லது இந்த தோல்விக்கு தாமாக சுய பரிசோதனை செய்து கொள்ளுமா என மாலை மலர் செய்தியாளர் கேட்டதற்கு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது.
தற்போது மத்தியில் ஆட்சி பீடத்தில் அமைந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்திஎங்களால் எங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட மக்களுடைய நம்பிக்கை பெற்று மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்று இருக்கிறோம் என்பது மாற்றுக் கருத்து கிடையாது.அந்த சதவீதத்தின் அடிப்படையிலே பாஜக தலைமையிலே அனைத்து கட்சியினுடைய தலைவர்கள் தொடர்புடைய உழைப்பை நான் பாராட்டுகிறேன் இந்த சதவீதம் என்பது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நிச்சயமாக எங்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதிலே மாற்று கருத்து கிடையாது அதனை நோக்கிய எங்களது பயணம் அமையும்.
வருகிற 22 ந் தேதி சென்னையில் தாமாக சார்பில் நடைப்பெற்ற பாரளுமன்ற தேர்தல் குறித்து வெற்றி தோல்விகளை தாண்டி வாக்கு எண்ணிகைகள் குறித்து செயற்குழு கூட்டம் நடைப்பெறுகிறது.
நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் திமுக தொடர்ந்து கூறி வருகிறது.கல்வித்துறையில் அரசியல் கூடாது.தரமான கல்விக்கு திமுக ஆபத்தை ஏற்படுத்துகிறது. தேர்வுகளில்
முறைகேடுகள் நடைபெறக்கூடாது.
கல்வித்துறையில் முறைகேடுகளை நடைபெறாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போட்டியின் போது மாநில நிர்வாகி அசோக் குமார் மாவட்ட தலைவர் சாதிக் அலி,மாநகரச் செயலாளர் பி.எஸ் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.