தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இடைகால் அரசு உயர் நிலை பள்ளியில்
ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அதனை கடைபிடிக்கும் பொருட்டு,
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது
மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் வேலம்மாள் வரவேற்று பேசினார்.
இடைகால் அரசு உயர் நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை. ஜெசிந்தா தலைமை தாங்கினார் பின்பு அவர் பேசும் போது, உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கும் பொருட்டு,சிறு வயதிலுள்ள குழந்தைகளை வேலைக்கு அனுப்ப கூடாது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்.
அரசு குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, அரசு நல திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகிறது அதனை முறையாக பயன்படுத்தி மாணவ மாணவிகள் பயன் பெற வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் வறுமையை காரணம் காட்டியோ, பணத் தேவையை காரணம் காட்டியோ குழந்தைகளை வேலையில் ஈடு படுத்தகூடாது. சிறு வயதில் குழந்தைகளை வேலையில் ஈடு படுத்துனால்,உடலும், உள்ளமும் பாதிக்கப்படும். மேலும் குழந்தைகளை அபாயகரமான தொழில்களான பட்டாசு தொழில், கண்ணாடி தொழில் போன்ற தொழில்களில்
ஈடு படுத்தகூடாது.
அப்படி குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடு படுத்துவோறுக்கு ரூ. 2/- லட்ஷம் அபதாரமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று சட்டம் இயற்ற பட்டுள்ளது.
ஆகவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து ஐ.ஏ,எஸ் ஐபிஸ் மருத்துவர் என்ஜினீயர், ஆக்க வேண்டும் நல்ல எதிர் கால சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.இறுதியாக பள்ளி மாணவி சுபாஸ்ரீ நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாட்டை பெங்களூர் குழந்தை உரிமையும் நீங்களும் என்ற அமைப்பும், திருநெல்வேலி மனித உரிமை கல்வி மற்றும் காப்புகளம் அமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்
இதில் 90 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.