வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே சாணம் பட்டியில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது கடந்த ஜுன் 14 ந்தேதி மாலை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்று நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தேறி நேற்று அதிகாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடந்து முடிந்ததும் புனித நீர் குடங்கள் புறப்பாடாகி மங்கல இசை முழங்க கோயிலை வலம் வந்து கருவறை விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது
இதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றதுஇவ்வவிழா ஏற்பாடுகளை சாணாம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.