பொட்டலூரணி போராட்டத்திற்கு சி.பி.ஐ எம்.எல் ஆதரவு!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPI ML) – டின் சார்பில்,
மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சகாயாயம் அவர்களும், தூத்துக்குடி, மாவட்டப் பொறுப்பாளர் தோழர். முருகன் அவர்களும்,
பொட்டலூரணி கழிவு மீன்நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக்குழுவைச் சந்தித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
கழிவு மீன்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அசு அனுமதியை இரத்து செய்ய வேண்டும்; பொதுமக்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.