மாஞ்சோலை பகுதியை வனத்துறை காப்புக்காடாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மாஞ்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை மலையிலிருந்து காலி செய்து, கீழே அனுப்பும் பணிகளை பிபிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் விருப்ப ஓய்வு வழங்கி வருகிறது. இதற்கான நோட்டீஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதேபோல் தற்போது வீடுகளை காலிசெய்ய சொல்லியும் பிபிடிசி நிறுவனம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் அரசே தேயிலை தோட்டங்களை ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்களை அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது கேள்விக்குறியாக உள்ளது