வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
பழனியில் யானைத் தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 3 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற ராமன், சோமசுந்தரம், கணேசன் ஆகிய 3 பேரை திண்டுக்கல் மாவட்ட உதவி வன அலுவலர் நர்மதா, கொடைக்கானல் உதவி வன அலுவலர் சக்திவேல், பழனி வனச்சரகர் கோகுல கண்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து யானை தந்தங்கள், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.