வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
அரசு மருத்துவமனை அவசர பிரிவு பகுதியில், வாகனங்கள் உள்ளே வர தடை- இரும்பு தடுப்பு அமைப்பு.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதியில் பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவின் பேரில், கண்காணிப்பாளர் வீரமணி மேற்பார்வையில், இரும்பு தடுப்பு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.