திருநெல்வேலி செய்திகளுக்காக இப்ராஹிம் ராஜா
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக்கோரியும் தலையணை பகுதியில் தடுப்பு அமைப்பதை நிறுத்தக்கோரி அம்பாசமுத்திரம் ஆலங்குளம் சேரன்மகாதேவி ஆகிய தாலுகாக்களில் நாளை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது
திருநெல்வேலி மாவட்டம் விக்ரம் சிங்கபுரத்தில் நேற்று நடைபெற்ற வர்த்தக சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை 19 . 6. 2024 அன்று அம்பை கல்லிடைக்குறிச்சி சேரன்மகாதேவி ஆலங்குளம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் ஒரு நாள் கடையடைத்து கவனயீர்ப்பு தீர்மானம் மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது
விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் மேல் அமைந்துள்ள அகஸ்தியர் அருவிக்கு பயணிகளை இலவசமாக குளிக்க அனுமதிக்க வேண்டியும் பானத்திர்த்தத்திற்கு சூரிய ஒளி படகு போக்குவரத்து நடைமுறைப்படுத்த கோரியும் பாபநாசம் தலையணையில் தடுப்புகளை அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வனத்துறையை கண்டித்து
காரையாறு அருகில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாக்களில் 18 நாட்களும் தங்கி இருந்து திருவிழா கொண்டாடுவதற்கு அனுமதிக்க வேண்டிய காலங்காலமாக இருந்த விதிகளை மாற்றி லோயர் கேமில் அமைந்துள்ள வன பேச்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர எந்தவித தடையும் கூடாத வண்ணம் அனுமதிக்க வேண்டியும் அம்பாசமுத்திரம் முதல் அகஸ்தியர் அருவி வரை தொடர்ந்து போக்குவரத்துகளை இயக்க கோரியும் பொதிகை மலைக்கு பக்தர்களை கேரளா அரசு கோல் தமிழ்நாடு அரசும் அனுமதிக்க வேண்டுமென்றும் நாளை விக்கிரமசிங்கபுரம் தேரடி திடலில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்நிகழ்வில் விகேபுரம் நகர வர்த்தக சங்கத் தலைவர் பீட்டர் சுவாமிநாதன் மாவட்ட பிரதிநிதி முருகேசன் செயற்குழு உறுப்பினர் குட்டி என்ற கணேசன் சிற்றரசன் அகஸ்தியர் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாராம் முருகன் பழனி குமார் பொன்னுதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்