விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இஎஸ்ஐ காலனி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் கலாதேவி (வயது 55). இவர் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுக்களில் தலைவியாக இருந்து செயல்பட்டு வந்தார்.

இவர் தலைவியாக இருக்கும் மகளிர் குழுவில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கடன் எதுவும் எடுக்காமல் வெறுமனே இருந்து வந்தனர். அவர்களிடம் அரசு மானியம் தரும் போது ஏன் கடனை எடுக்காமல் இருக்கிறீர்கள்? என்று கூறி கடனை எடுக்கச் சொல்லி அவர் பெற்றுக் கொண்டார்.

25 பெண்களிடம் தலா ரூ.2-லட்சம் வீதம் பெற்றுக்கொண்டு ரூ.50-லட்சம் மொத்தமாக பெற்று தன் கணவர் குமாருடன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து ஏமாந்த 25 பெண்கள் விருதுநகர் சென்று பொருளாதார குற்றப்பிரிவு புகார் செய்தனர்.

அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கடன் பெற்ற 25 பெண்களிடமும் கடன் கொடுத்த தனியார் நிறுவனங்கள் பெரிதும் சிரமப்படுத்துவதாகவும், பல பெண்கள் ஊரை விட்டு ஓடி விட்டதாகவும், பல பெண்கள் கணவர் குழந்தைகளை விட்டு பிரிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *