பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்காவின் 487-ஆம் ஆண்டு கந்தூரி விழா நிகழ்ச்சி..

ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் அமைந்துள்ள பீர் கைப் ஒலியுல்லா தர்காவின் 487-ஆம் ஆண்டு கந்தூரி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சந்தனக்கூடு உரூசுடன் துவங்கிய நிகழ்ச்சியில், ஒலியுல்லாவிற்கு போர்வை போர்த்தப்பட்டு மௌலூது ஷரீப் ஓதியும், கொடியேற்றத்துடன் ரவ்லா சரீபீல் சந்தனம் பூசி இஸ்லாமியர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தப்ரூக் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கந்தூரி விழா நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை இராஜகிரி ஹனபி பெரியபள்ளிவாசல் பரிபாலன சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.