செங்குன்றம் செய்தியாளர்
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு செங்குன்றத்தில் ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா அமைப்பின் சார்பில் செங்குன்றம் கூட்டு சாலையில் இருந்து மார்கெட் காமராஜர் சிலை வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் ராஜாராபர்ட் செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்து குழந்தை தொழிலாளர் தடுப்பு பற்றிய உறுதிமொழியை வாசித்தனர்.
இதில் திருவள்ளூர் மாவட்ட திட்ட மேலாண்மை இயக்குனர் உதயகுமார் மற்றும் ஜான் சுகுமார் சுரேஷ் ,குணசேகரன்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கனிமொழி சமூக தொழிலாளர் துறை அலுவலர் ஜெயகாந்தன் ஒன்றிய மேலாளர் லதா மற்றும் கனிமொழி ஷோபனா சுரேஷ்குமார் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் பேரூராட்சி தலைவி தமிழ்செல்வி ரமேஷ், புள்ளி லைன் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி உட்பட பலரும் சாய் சமுதாய அர்ஜுன் கல்லூரி நர்சிங் மாணவிகளும் பொதுமக்களும் ஏராளமானவர்கள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.