கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழா..
உடலை வில்லாக வளைத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இணைந்து பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தல்..
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் பள்ளியில் யோகா தின விழா நடைபெற்றது..
பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகள் இணைந்து யோகாசனம் செய்தனர்.
இதில்,சிறுவர்,சிறுமிகள் இணைந்து, ,பத்மாசனம், யோகமுத்ரா, வக்ராசனம், சூர்யநமஸ்காரம், சித்தாசனம், பர்வதாசனம், வீராசனம், உள்ளிட்ட பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து அசத்தினர் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இணைந்து பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினர்.
பள்ளிப்பாடங்களைப் பயில்வதோடு, யோகாசனம் செய்வதால் மனதிற்கு புத்துணர்ச்சி பெறுவதோடு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த முடிவதாக மாணவ,மாணவிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி கௌரி உதயேந்திரன்,பள்ளி முதல்வர் சரண்யா,யோகா பயிற்சியாளர் சதீஷ் உட்பட ஆசிரிய,ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்..