தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில்
கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது
மாநில மகளிர் பாசறை ஒருங்கினைப்பாளர்
பா.சத்தியா தலைமை வகித்தார்.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன்,
மாவட்ட தலைவர் நாகலிங்கம்,மாவட்ட செயலாளர் தினகரன், மாவட்டமகளிர் பாசறை செயலாளர் சங்கிதா சிவபிரகாஷ், மாவட்ட மருத்துவ பாசறை செயலாளர் பால்ராஜ். ஆகியோர் காவல் துறையினரை மீறி கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
இதில்57 -உயிர்களை காவு வாங்கிய கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய
தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது
இந்நிலையில் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பர்ணபாஸ் தலைமையில்
ஆலங்குளம் காவல் ஆய்வாளர் மாதவன், ஆலங்குளம் மகளிர் காவல் ஆய்வாளர் உமாதேவி
உதவி ஆய்வாளர்கள் மாடசாமி,சின்னத்துரை, முத்துப்பாண்டி,ஆகியோர் ஆர்பாட்டத்தில் காலந்து கொண்ட பெண்கள் உள்பட 40 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை முன்னெச்சரிக்
கையாக கைது செய்து ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்பு இரவு விடுவிக்கபட்டனர்.