தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் ஒன்றிய தலைவர் பண்டரிநாதன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர் சியாம் பிரசாத்முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் முன்னிலையில் ஒன்றிய பொதுச் செயலாளர் நாகராஜா, மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் புனித ராஜன், மகளிர் அணி ஒன்றிய தலைவி நவரத்தினம், உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் அமல்ராஜ், ஆலங்குளம் பாஜக பிரமுகர்கள் குமார செல்வி, காந்தி, குருவன் கோட்டைபாலகிருஷ்ணன் ,சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .