தூயதமிழ் இளைஞர் பாசறையின் நான்காம் ஆண்டு விழா
*நூல் வெளியீட்டு விழா
*தூயதமிழ்க் கருத்தரங்கம்
*தூயதமிழ்ச் சொல்லரங்கம்
*சாதனையாளருக்குப் பாராட்டு விழா என
ஐம்பெரும் விழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டு வரும் புதன்கிழமை பேரூரில் தமிழ்க் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் அரங்கில் நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய முயற்சியாக இவ்விழாவில் பிறமொழிக் கலப்பில்லாமல் தூயதமிழில் உரையாற்றும் வகையில் இளைஞர்கள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட உள்ளனர்.
விழாவிற்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை மேனாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் ஐயா அவர்கள் தலைமை ஏற்று நடத்தவுள்ளார்.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஐயா அவர்கள் அருளுரை வழங்க உள்ளார்
விழாவினை தூயதமிழ் இளைஞர் பாசறையின் நிறுவுநர் தலைவர் தமிழ் மணிகண்டன் ஒருங்கிணைத்துள்ளார்.
தமிழ் மணிகண்டன் க.மு.,கல்.இ
விழா ஒருங்கிணைப்பாளர்
நிறுவுநர் தலைவர்
தூயதமிழ் இளைஞர் பாசறை
9488969890