திருநெல்வேலிஜூன் :24 திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேல் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்.நேரில் சந்திப்பு பொதுமக்கள் கண்ணீர் மல்க மக்கள் கோரிக்கை*
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்தார்.. தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாக, கட்டாய நிர்பந்தபடுத்தி, கையொப்பம் வாங்கிய நிர்வாகம், மாஞ்சோலை மக்கள் விருப்பத்துடன் வெளியேறுவதாகவும் தவறான செய்திகள் பரப்பபடுகின்றது.தேயிலை கம்பெனியை அரசே எடுத்த நடத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். நிலைமையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசிடம் பெற்று தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அத்துனை நடவடிக்கைகளுக்கும் உறுதுனையாக இருப்போம் எனவும் உறுதி கூறினார். இச்சந்திப்பின் போது நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே. பீர்மஸ்தான், மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஜலில், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ஷேக் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷஃபி , சமூகஊடக அணி மாவட்ட தலைவர் எஸ்.பி.எம் கனி, சிங்கை அப்துல்ரஹ்மான், ஜாபர் அலி கலந்தர் மீராசா ஆகியோர் உடன் இருந்தனர்