மதுரை பலநோக்கு சமூக சேவா சங்கத்தில் தொழில் துவங்க கடனுதவி வழங்கும் விழா!!!
மதுரை பைபாஸ் ரோட்டில் மதுரை பலநோக்கு சமூக சேவா சங்கத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் மேம்பாட்டுக்காக ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் சிறுதொழில் துவங்குவதற்கான கடன் உதவி வழங்கும் விழா, மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பலநோக்கு சமூக சேவை சங்கத்தின் செயலர் அருட்தந்தை கபிரியேல் வரவேற்று பேசினார். மதுரை உயர்மறை மாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் அருட்பணி பால்பிரிட்டோ வாழ்த்துரை வழங்கினார்,
பேராயர் அந்தோணி பாப்பு சாமி பயனாளிகளுக்கு காசோலை வழங்கி ஆசி வழங்கினார், இறுதியாக பலநோக்கு சமூக சேவை சங்க இணை செயலாளர் அருட் தந்தை ராஜன் நன்றி கூறினார். விழாவை சசிகலா தொகுத்து வழங்கினார்.