தஞ்சாவூர்-இலங்கை கொழும்பு நகரில் 14வது சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, நேபால், ஈரான், ஈராக், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் இருந்து சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர் இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் கத்தா பிரிவில் வர்னேஷ் தங்கம் பதக்கம் வென்றார். கத்தா பிரிவில் கிருஷாந்த் வெள்ளி பதக்கம் வென்றனர்.
மங்கனங்காடு கனிஷ்கா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார். எத்திஷ் ராஜன் தங்க பதக்கமும் திபின், தருண், நித்ய ஶ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்றனர். இலங்கையில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பயிற்சியாளர் ஸ்டாலின் கூறுகையில், இலங்கையில் நடந்த போட்டியில் 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றோம். தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு ஊக்கப்படுத்த வேண்டும். 6 வயதில் இருந்து 12 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.
விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டு வருகிறோம் என்றார்
தஞ்சாவூர் அதிராம்பட்டினத்தை சேர்ந்த மாணவி நித்ய ஶ்ரீ கூறுகையில், 10ம் வகுப்பு படித்து வருகிறேன். தற்காப்பு கலை முக்கியமானது. நாங்கள் தனியாக செல்லும் யாராவது வம்பு இழுத்தால் தனியாக நாங்களே சண்டை போட முடியும். எங்களை அரசு ஊக்கமளித்தால் நன்றாக இருக்கும் என்றார்.