ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்,
கர்நாடக அரசை கண்டித்து திருவாரூர் வடக்கு மாவட்ட வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பு நடைபெற்றது
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் என் ஆர் முருகானந்தம் மாவட்ட செயலாளர் எம் ஆர் அசோக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர் மாவட்ட இணைச் செயலாளர் பா, அரிஸ்டாட்டில் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கா,வெற்றி முன்னிலை வகித்தனர் மாநில பொருளாளர் அ, ஆரோக்கிய செல்வம் மாநில இளைஞரணி தலைவர் எம்கே பாவா கண்டன உரை நிகழ்த்தினர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் கர்நாடகம் ஆண்டிற்கு 177.25 தண்ணீரை திறந்து விட வேண்டும் கணக்கீட்டின்படி ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டிய நீரை மேலாண்மை வாரியம் பெற்று தர வேண்டும் சட்டவிரோதமாக கர்நாடகாவில் கட்டியுள்ள கபினி ஹேவா ரங்கி ஹேமாவாசி அணையின் நீரை உபரிநீராக கணக்கில் கொள்ள வேண்டும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கட்டப்படும் அணையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்டத்தின் பிற பகுதிகளான கொரடாச்சேரி குடவாசல் வலங்கைமான் பகுதிகளிலிருந்து கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்