பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20.
திருப்பூர் மாவட்டம் தொழிலாளர் நலத்துறை( அமலாக்கம்) சார்பில் நுகர்வோர் சங்கங்கள் உடனான காலாண்டு கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 24 6 2024 திங்கள் அன்று மாவட்ட தொழிலாளர் துறை உதவியாளர் ஜெயக்குமார் ( அமலாக்கம்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இக்கோட்டத்தில் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்
மேலும் இதில் பல்லடம் தாலுக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் தலைவரும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான மணிக்குமார் பேசுகையில் மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஏஜென்சிகள் பெட்ரோல் டீசல் நிரப்பகையில் லிட்டருக்கு 100 மில்லி வரையில் எடை அளவு குறைக்கப்பட்டதாகவும் எடை அளவு விலை விவரம் காட்டும் வாகன எரிபொருள் விநியோகி மெஷின்கள் குளறுபடி செய்து ஏமாற்றப்படுவதாகவும் புகார்கள் எழுகிறது
எனவே பெட்ரோல் பங்குகளில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் மளிகை கடை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பேக்கரி ஹோட்டல்களில் பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களில் டீ காபி உணவு பண்டங்களில் எடை அளவு குறைபாடு உள்ளது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு நுகர்வோர்களின் பணத்தை சுரண்டி ஏமாற்றுபடைவதாகவும் தொடர் புகார்கள் எழுகிறது
இதன் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மேற்படி கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர் விற்பனையாளர்களுக்கு பல இடங்களில் ஈ எஸ் ஐ பி எப் விடுமுறை சம்பளமுள்ளிட்ட சட்ட உரிமை காப்பீடுகள் அமல்படுத்துவதில்லை இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக பல்லடம் நகரப் பகுதிகளில் உள்ள பழங்கள் காய்கறி கடைகள் ஹோட்டல்கள் பேக்கரி மளிகை கடை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் அடிக்கடி ஆய்வு செய்து பொட்டல பொருட்களில் எடை அளவு விலை மற்றும் எடையளவு கருவிகளை பரிசோதித்து முறைகேடு செய்யும் காரியம் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வலியுறுத்தப்பட்டது.
பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20.