மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்னை மாவட்டம் மாதவரம் வட்டம் 1433 ஆம் ஆண்டு வருவாய் தீர்ப்பாயை கணக்கு முடிப்பு ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது.

இந்த முகாமை மாதவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுதர்சனம் துவக்கி வைத்தார். இதில் மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் கோட்டாட்சியர் இப்ராஹிம் தாசில்தார் வெங்கடாசலபதி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். முதலாவதாக எம்எல்ஏ சுதர்சனம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் பட்டா ,பட்டா பெயர் மாற்றம் முதியோர் உதவித்தொகை பென்ஷன்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ,ஜாதி சான்றிதழ் மற்றும் இதர சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது

முதல் நாளான இன்று புத்தகரம், மாத்தூர் ,கொசப்பூர் ,மஞ்சம்பாக்கம் ,மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மனுக்களும் நாளை இரண்டாம் நாள் அன்று கதிர்வேடு ,சூரப்பட்டு, புழல் , வட பெரும்பாக்கம் ,செட்டிமேடு ஆகிய பகுதிகளுக்கு மனுக்கள் பெறப்படுகின்றது. இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் சரிபார்த்த்து அதற்கு தீர்வு கண்டு உரியவர்களிடம் சமர்க்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *