பல மாவட்டங்களில் திருட்டு கொள்ளை வழக்கில் திறமையாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த ராஜபாளையம் காவல் துறையினரை நேரில் அழைத்து பாராட்டிய தென் மண்டல காவல்துறை தலைவர்
விருதுநகர் மாவட்டம் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்களை பிடிக்க விருதுநகர் மாவட்ட எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது டிஎஸ்பி அழகேசன் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன் (வடக்கு)
பவுல்ஏசுதாசன் எஸ்ஐ கமலக்கண்ணன்
எஸ்ஐ தமிழலகன் (சைபர்கிரைம்)(தெற்கு) வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்ஐ சக்திகுமார் மற்றும் ஆளினர் காளிதாஸ் அடங்கிய குற்றப்பிரிவு
குழுவினர் அடங்கிய ராஜபாளையம் காவல்துறையின் தனிப்படையினர் பல வழிகளிலும் சிறப்பாக புலனாய்வு
குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் லேப்டாப் செல்போன்கள் மேலும் கொள்ளையடித்த நகைகளை விற்று 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு காட்டன் மில் என்று கோடிக்கனக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்த சொத்துக்கள் மற்றும் ஆவனங்களை பறிமுதல் செய்து அதிரடி காட்டிய ராஜபாளையம் உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை நேரில் அழைத்து தென் மண்டல காவல்துறை தலைவர் திரு கண்ணன் அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்கள்
ராமநாதபுரம் காவல்துறை துணை தலைவர் திரு துரை (தென்மண்டல பொறுப்பு) விருதுநகர் மாவட்ட எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்