மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, கள்ளக் குறிச்சி கருணா புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து தற்போது வரை 60 பேர் உயிரிழந்த நிலையில், அதை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் பதவி விலகக் கோரியும், பலியானவர்கள் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும், கள்ளச்சாராயம் குடித்து கண் பார்வை இழந்தவர்கள், மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்தும், சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா ? என உண்மை நிலை முழுமையாக தெரிந்துகொள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையின் மத்திய குழுவை அமைத்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கு கள்ளச்சாராய பிரச்சனையை கொண்டு செல்லவேண்டும். கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆளுங்கட்சியின் அஜாக்கிரதையால் நடந்த உயிர் பலிக்கு ஆளுங்கட்சி முழு பொறுப்பேற்க
வேண்டும் என வலியுறுத்தி மதுரை தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாநகர் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன் ,மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மணிகண்டன்,புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் செயலாளர் கணபதி ,புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மணிமுத்து ஆகியோர் தலைமையில் தே.மு.தி.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.