குரூப் 2, 2A தேர்வு 2327 காலி பணியிடங்கள் அறிவிப்பு தேர்வாளர்கள் ஜூன் 20 முதல் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்,டி என் பி எஸ் சி தேர்வு
பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி தேர்வாளர்கள் ஜூன் 20 முதல் ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர் துணை வணிகவரி அலுவலர் துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தனிப்பிரிவு அலுவலர் உதவிப்பிரிவு அலுவலர் வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர் முதுநிலை ஆய்வாளர் தணிக்கை ஆய்வாளர் உதவி ஆய்வாளர் கைத்தறி ஆய்வாளர் மேற்பார்வையாளர் இளநிலைக் கண்காணிப்பாளர் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2 A பணியிடங்கள் என்று 2,327 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது