திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் லாயம் புதுத்தெருவில் உள்ள ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன், ஸ்ரீ வெள்ளை ஆதம்பர் முனீஸ்வரர் ஆலயத்தில் 12-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது.
கடந்த 23 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு லாயம் மெயின் ரோடு ஸ்ரீவினைத் தீர்த்த யோக கணபதி ஆலயத்தில் இருந்து பால்குடம், காவடிகள் எடுத்து வீதி உலா காட்சி வந்து ஆலயத்தை அடைந்து, ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று,
சிறப்பு தீபாராதானையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை ஆறு மணிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மன் தாரை தம்பட்டையுடன் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. நேற்று (24 ஆம் தேதி)திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், பதினோரு மணிக்கு காப்பு அவித்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று பக்தர்கள் பொதுமக்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை லாயம் புதுத்தெரு வாசிகள், மகளிர் குழுக்கள், இளைஞர்கள் மற்றும் உபயதாரர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.