திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலி- க்கான ஜமாபந்தி திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா அவர்கள் தலைமையில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது
மேற்படி நிறைவு விழாவில் செங்கம், மேல்பள்ளிப்பட்டு, இறையூர், பாச்சல், புதுப்பாளையம், ஆகிய ஐந்து உள்வட்டங்களை சேர்ந்த கோரிக்கை மனுக்களுக்கு நிறைவு நாளான இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..
மேற்படி விழாவில் ஜமாபந்தி அலுவலர் சிவா, செங்கம் வட்டாட்சியர் முருகன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் ரேணுகா, ஒன்றிய குழு சேர்மன் விஜயராணி குமார், மண்டல துணை வட்டாட்சியர் தமிழரசி, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு, செங்கம் நகர கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், விவசாய குழுக்கள் கொண்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மேற்படி நிறைவு விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்….