தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம்,
செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி
தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமையில் எடுக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் உடல்நல கேடு, உயிரிழப்பு, சமூக அவலங்கள்
போன்றவை போதைப் பொருட்கள்
பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படுகிறது.
உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவுக்கும் போதை பொருட்களை சமூகத்தில் இருந்து விலக்க வேண்டும் என்பது போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்கள் பழனிச்செல்வி கல்பனா, திலகவதி
அனுப்பிரியா உள்ளிட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.