பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் திருத்தேர் வீதி உலா சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது
கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகா மாரியம்மன் வீதி உலா வந்தது. 9ம் திருவிழாவான
இன்று ஸ்ரீ மகா மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் செய்துசிறப்பு சீர் செய்து வாணவேடிக்கை மற்றும் தாரை தப்பட்டை , மேளதாளத்தோடு சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலை 4.00 மணி அளவில் கோயில் நிர்வாகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெருமத்தூர் குடிக்காடு , நன்னை, வேப்பூர் ,காருகுடி, முருக்கன்குடி, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மங்கள மேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.20 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் தேரோட்டத்தை அப்பகுதி மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்